{"product_id":"யுவான்-சுவாங்-இந்தியப்-பயணம்-1-2-3-புதியது","title":"யுவான் சுவாங் இந்தியப் பயணம் 1,2,3 - புதியது","description":"\u003cp\u003eபுனிதப் பயணியருள் பௌத்த சமயத்தின்பால் தீராத பற்றுக்கொண்ட கன்ஃபூசியனிச சிந்தனை மரபு வழித்தோன்றலான யுவான்சுவாங்கின் இந்திய பயணம் பற்றிய குறிப்புகள் பேரார்வத்தைத் தூண்டக்கூடியவை.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eயுவான்சுவாங் சுமார் பதினாறு ஆண்டுகாலம் பயணம் செய்து தான் நேரில் கண்டவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப்பேரரசர் தாங் வேண்டுகோளுக்கேற்ப சீனமொழியில் இயற்றிய பயண நூலினை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஉதயனா, தக்ஷசீலா, காஷ்மீர், ராஜபுரம், மதுரா, அயோத்தியா, பிரயாகை, சிரவஸ்தி போன்ற தற்கால இந்தியப் பகுதிகளெல்லாம் தனித்தனி நாடுகளாகக் கோலோச்சிய காலத்தில் தான் கொண்ட சமயப்பற்றால் உந்தப்பட்டு அளவிறந்த இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையே அயர்வறியாது தொடரும் யுவான் சுவாங் இந்தியப் பயணம் வியப்பளிப்பதுடன் ஆர்வமூட்டக் கூடியதாகவும் இருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபுத்தருடைய பிறப்பிடம், இறப்பிடம், போதி நிலையை எட்டிய சூழமைவு, போதி மரத்தடி, சமயப்பணி நிமித்தம் அவர் பயணித்த நாடுகள், நாலந்தா பல்கலைக் கழகம், இந்தியாவின் வடகிழக்கு நாடுகள், மைய நாடுகள், தென்னிந்திய நாடுகள், இலங்கை பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.\u003c\/p\u003e","brand":"The Ignorant Books","offers":[{"title":"Default Title","offer_id":67698517115116,"sku":null,"price":960.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0432\/1610\/9729\/files\/rn-image_picker_lib_temp_a77c754c-5641-4e65-8a6f-5ad8983162f4.jpg?v=1791623591","url":"https:\/\/usedtamilbooks.com\/products\/%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-1-2-3-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81","provider":"The Ignorant Books","version":"1.0","type":"link"}