{"product_id":"தமிழ்-அறிவோம்-15-புத்தகங்கள்-புதியது","title":"தமிழ் அறிவோம் 15 புத்தகங்கள் - புதியது","description":"\u003cp\u003eமொழித்திறம் \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eசெறிவு மிகுந்த இலக்கணக் கூறுகளை இனிமையும் எளிமையும் ததும்ப எடுத்துரைக்கும் தொகைநூல். ஒவ்வொரு சொல்லுக்கும் அடியில் எத்தகைய ஆணிவேர்த்தன்மை உள்ளது என்பதை விளக்குகிறது. தற்காலத் தமிழ்நடையில் காணப்படுகின்ற எண்ணற்ற பிழைகளைக் களையும் வழிகளைக் கற்றுக் கொடுக்கிறது. நம் மொழியின் உண்மையான அழகையும் நுட்பத்தையும் யாவர்க்கும் புரிகின்ற வகையில் எடுத்தியம்புகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஅருஞ்சொற்பொருள் \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஎழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறிய விழைவோர்க்குக் கனிநூல் இது. பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e---------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமொழிப்படிகட்டு\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ் மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளைச் சுவையான கட்டுரைகளால் நிரல்பட எழுதித் தெளிவாக்குகிறார் இந்நூல் ஆசிரியர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e---------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eசொல் என்னும் உயிர்விதை \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமொழியைக் கற்கத் தொடங்கினால் எழுத்து சொல் பொருள் என்றே தொடங்க வேண்டும். இந்நூலில் இலக்கணமும் மொழிச்செய்திகளும் புதுச்சொல்லாக்கங்களும் திரட்டித் தரப்பட்டிருக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஇலக்கணத் தொடக்கம் \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ் மொழி இலக்கணம் கற்பது மிக எளிது. என்ன என்று தெரிந்துகொள்வதிலிருந்து தொடங்குகிறது அக்கல்வி. இலக்கணம் கற்க விரும்புவோர்க்குத் தொடக்க நிலை அறிவினைப் புகட்டுகிறது இந்நூல். \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபிழையில்லாத எழுத்து \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஎழுத்தில் பிழை என்றால் முதலிடம் ஒற்றுப் பிழைகளுக்குத்தாம். தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதுவதற்குரிய அடிப்படைகளைக் கூறுகிறது இந்நூல் தொகை, தொடர் என்னும் தமிழ்ச் சொற்றொடராக்க வழிமுறைகளை அறியச் செய்வதன் வழியாக இதுவரை விரித்தெழுதப்படாத மொழியறிவு நுணுக்கங்களைக் கற்பிக்கிறது. \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eவலிமிகுதல் \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eவலிமிகுதல், மிகாமை குறித்து எளிமையாய் விளக்குகின்ற கையேடு. இரண்டு சொற்கள் சேர்கையில் எங்கே ஒற்று மிகும்? எங்கே ஒற்று மிகாது? இக்குழப்பங்கள் எண்ணற்றோர்க்கு உண்டு. அதனை எளிமையான கற்பித்தலின் வழியாகத் தெளிவிக்கிறது இந்நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eவடசொல் அறிவோம் \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்ச்சொற்களுக்கும் வடசொற்களுக்கும் வேறுபாடு தெரியாதிருக்கிறோம். நம் அன்றாடப் பயன்பாட்டில் பற்பல வடசொற்கள் கலந்திருக்கின்றன.இது வடசொல், இது தமிழ்ச்சொல் என்று தெரிந்தால் தானே நல்ல தமிழைப் பயன்படுத்த முடியும்? அதற்கு விடையாவது இந்நூல். வடசொற்களை அடையாளம் காணும் வழிமுறைகளையும் அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களையும் விளக்கும் நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஇலக்கணத் தெளிவு\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழை அறிவதும் தமிழ் இலக்கணத்தை அறிவதும் ஒன்றே. மொழியின் இலக்கணக் கூறுகள் யாவும் புலவர்க்கும் அறிஞர்க்குமான பொருளாகக் கருதப்படுகின்றன. அதனை உடைக்கிறது இந்நூல். பள்ளிப் பிள்ளைகள் முதல் ஆசிரியர்கள்வரை பாமரர் முதல் படிப்பாளர்வரை அனைவரும் தமிழ் இலக்கணத்தைப் படிக்கலாம். பயிலலாம். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த யாவரும் அறியுமாறு இலக்கணச் செய்திகளைத் தெளிவாக எளிமையாக எடுத்தியம்புகிறது இந்நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமொழிவளப் பேழை\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமொழியறிவினைத் தளரா முயற்சியால் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான நுண்மைகள் மிகுந்த நம் மொழியில் ஒவ்வொன்றையும் பழுதறக் கற்றிருப்பது சிறப்பு. எழுத்தாளராகவோ பேச்சாளராகவோ கல்வியில் சிறந்தோர் ஆகவோ வேண்டுமெனில் மொழியில் வல்லமை பெற்றாக வேண்டும். குழந்தைக்குப் பால்புகட்டுவதுபோல் மொழியறிவினை ஊட்டுவிக்கிறது இந்நூல். தமிழில் செம்மையுற உதவும் நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eசொல்லேர் உழவு\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஎண்ணமும் எழுத்தும் பேச்சும் பாட்டும் என யாவும் சொற்களே, சொற்கள்தாம் கருவிகள். தமிழ்ச் சொற்கள் தோன்றி நிலைபெற்ற மொழித்தடத்தினை விளக்குகிறது இந்நூல். சொற்களின் தோற்றுவாய் முறைகளை அறிந்துவிட்டால் ஒரு சொல்லைத் தவறாகப் பயன்படுத்தமாட்டோம். புதிதாய்ப் பலப்பல சொற்களை ஆக்குவோம். சொல் தோற்றமுறைகளையும் சொல்லறிவு பெறும் முறைகளையும் விரிவாகவும் ஆழமாகவும் எளிமையாகவும் விளக்குகின்ற நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழோடு விளையாடு\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழைக் கற்றுக்கொள்வதற்குப் புதிர்வழியைத் தேர்ந்தெடுப்பது அருமையான முறை. பயில்வோர்க்கு முதற்கண் கற்பித்து, அந்தக் கற்பிப்பின் பொருளில் எழுப்பப்படும் புதிர்களால் அவர்களை உள்ளிழுத்து, ஆழ்ந்து சிந்திக்கச் செய்து தமிழைப் புகட்டுதல், புதிதாய் அறியப் புகும் மாணாக்கர்களையே பங்கேற்கச் செய்து பயிற்றுவித்தல். நன்றாய்த் தமிழறிந்த நல்லோர்க்கு அறிந்தனவற்றை அகழ்ந்தெடுத்தல். மொழியின் கட்டுமானம், இலக்கணக் குறுக்குவெட்டுத் தோற்றம். சொற்களின் பயன்பாடுகள். சொற்றொடர்களின் வகைப்பாடுகள் என அடிப்படையான தமிழறிவை ஊட்டும் பெருமுயற்சியே இந்நூல். இளையோரின் கல்விக்கும் ஆசிரியரின் கற்பிப்பிற்கும் உதவ வல்லது. தமிழறிந்த தலைமுறையை உருவாக்க நினைக்கும் பெற்றோர் இந்நூல் வழியைப் பற்றியே தங்கள் பிள்ளைகட்குத் தமிழ் கற்பிக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e----------\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடிக்கடி தோன்றும் ஐயங்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதொன்மையும் நுண்மையும் வளமும் வளர்ச்சியுமாய்ப் பன்முகத்தன்மை அடைந்த மொழி தமிழ். முறையாகக் கற்றறிந்தவரையும் ஐயுறச் செய்யும் ஆற்றலுடையது. எல்லாம் அறிந்ததைப்போல் இருந்தாலும் எதிர்பாராத இடத்தில் ஓர் ஐயம் தோன்றிவிடும். பதினொரு\/பதினோரு, ஆறை\/ஆற்றை, மட்குதல்\/மக்குதல், வாய்பாடு\/ வாய்ப்பாடு இவற்றில் எது சரி என்று யாராயினும் தடுமாறியிருப்போம். ஒருவேளை இதுதான் சரியென்று தெரிந்தாலும் அது ஏன் என்பது தெரியாது. எழுத்துப் பணியில் உள்ளோர் மட்டுமில்லை. ஆசிரியர் மாணாக்கர் தொடங்கி சிறுமடல் எழுதுவோர் வரைக்கும் எல்லாருமே திடீரென்று தோன்றும் தமிழ் ஐயங்களால் திகைக்கிறோம். அவர்கட்குக் கைவிளக்காவது இந்நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஅடிப்படை அறிதல் \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ் மொழியின் அடிப்படைகள் மிகவும் எளியவை. தெளிவாகக் கற்றுக் கொடுத்தால் கிளியும் பேசும் தன்மையவை. மொழியின் இயல்புகளை எல்லாரும் அறிந்திருக்க வேண்டும். நாம் நாள்தோறும் பயன்படுத்துகின்ற சொல் நம்மிடமிருந்து ஐயந்திரிபற வெளிப்பட வேண்டும். அதற்கு உதவுகின்ற மொழி அடிப்படைகளைப் புகட்டுவது இந்நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e--------\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eசொற்கள் வந்த வழி \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்ச்சொற்கள் தோன்றிய வழிமுறைகளை அறிந்திருப்பது மொழிக்கல்வியின் இன்றியமையாத பகுதி. ஒரு சொல்லின் தோற்றுவாய் அதனோடு தொடர்புடைய பற்பல சொற்களோடு பொருந்தி வாழ்கிறது. சொல்லின் வேரழகு தெரிந்த பிறகு அச்சொல்லை நாம் ஒருபோதும் பிழையாகப் பயன்படுத்தமாட்டோம். வேர்ச்சொல் வளமும் புதுச்சொல் மலர்ச்சியுமாக இயங்கும் இம்மொழியின் மேன்மையான பகுதிகளைச் சுவையாக எடுத்தியம்புகிறது இத்தொகை நூல்.\u003c\/p\u003e","brand":"The Ignorant Books","offers":[{"title":"Default Title","offer_id":67698303500524,"sku":null,"price":2320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0432\/1610\/9729\/files\/rn-image_picker_lib_temp_2f292805-36af-4ce5-a508-8e9ba45f55e7.jpg?v=1791621545","url":"https:\/\/usedtamilbooks.com\/products\/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-15-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81","provider":"The Ignorant Books","version":"1.0","type":"link"}